`ஒரு கலியுக வரதன்!' - ஆனந்த விகடனில் தினகரனைக் கடுமையாகச் சாடும் கமல்ஹாசன் | Kamal haasan Questions Dinakaran's RK Nagar Election Victory

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (03/01/2018)

கடைசி தொடர்பு:14:44 (03/01/2018)

`ஒரு கலியுக வரதன்!' - ஆனந்த விகடனில் தினகரனைக் கடுமையாகச் சாடும் கமல்ஹாசன்

கமலஹாசன்

ஆனந்த விகடன் இதழில், 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடர் எழுதிவரும் நடிகர் கமல்ஹாசன், இந்த வாரம் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்தும், அதன் வெற்றி குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆளும் தரப்பும் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் தரப்பும், அதிக அளவில் பணம் கொடுத்திருப்பதை விமர்சித்துள்ள நடிகர் கமல்ஹாசன், பணம் கொடுத்து வென்ற தினகரனைக் கொண்டாடித் தீர்க்கும் மனநிலையையும் சாடியிருக்கிறார்.

 

''என்ன நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பாராட்டுகிறார்கள். இப்படி, ஆகப்பெரிய அவமானம் எப்படி கொண்டாட்டமாக மாறுகிறது?" என டி.டி.வி.தினகரனைத் தாக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். "என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் 'அடடா ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது. இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது' என்று பாராட்டுகிறார்கள்" என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, தினகரனின் வெற்றிக்குப் பின்னால் உள்ள சில கேள்விகளையும், ஆர்.கே.நகர் மக்கள் மற்றும் தமிழக வாக்காளர்களுக்குச் சில கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ட்விட்டரில்  சமீப காலமாக கருத்து தெரிவிக்காதது ஏன், அரசியலை விடுத்து சினிமா வேலைகளில் மூழ்கியிருக்கும் தன்மீதான விமர்சனம், அரசியல் நோக்கிய அடுத்த பயணம்குறித்தும் நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். வீரியமான அந்த முழுமையான  கட்டுரையைப் 'பொங்கல் சிறப்பிதழாக'  நாளை (04012018)  வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் வாசிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க