வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/01/2018)

கடைசி தொடர்பு:21:30 (03/01/2018)

பட்டாசுத் தொழிலாளர்களுக்காகக் களமிறங்கிய கட்சிகள்! ஒதுங்கின அ.தி.மு.க, பா.ஜ.க

பட்டாசுக்குத் தடை விதிக்க வேண்டி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விரைந்து நடத்தி நீதி வழங்கவும் தமிழக அரசு இவ்வழக்கில் ஒரு வாதியாக வாதாடவும் பட்டாசு தொழிலையும் அதை நம்பியுள்ள
5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை வாழ வைக்கவும் வேண்டி கடந்த 26-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி தொழில் நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் உற்பத்தியாளர்கள்.

அனைத்து கட்சியினர் போராட்டம்

இதுநாள் வரை இவர்களின் போராட்டம் பற்றி எந்த ஆதரவுக்குரலும் எழுப்பாமல் வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய, மாநில அரசுகள். இந்த நிலையில் சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலைகள் இயங்காததால் பொதுமக்களும், அதைச் சார்ந்து தொழில் செய்வோரும் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் போரட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று கடையடைப்பு நடத்தியுள்ளனர். பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிவகாசியைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கடையடைப்பு நடந்து வருகிறது. இப்போராட்டத்தில் அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கலந்து கொள்ளவில்லை. இன்றுடன் 9 வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க