`ஆர்.கே.நகர் மக்களைக் கொண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவேன்!' - எம்.எல்.ஏ தினகரனின் பன்ச்

சென்னை தண்டையார்ப்பேட்டையில் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் இன்று வருகை தந்தார். அவரின் ஆதரவாளர்கள் பெருந்திராளாகக் கூடி அவருக்கு வரவேற்பு தந்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், `சட்டமன்றக் கூட்டத்தில் மக்கள் பிரச்னையைப் பற்றி பேசுவேன். தினகரன் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தால், மக்கள் பிரச்னையை ஆளுங்கட்சி புறந்தள்ளிவிட முடியாது. கட்சிப் பிரச்னை என்பது பங்காளிச் சண்டை போன்று. அதையும் இதையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது.

ஆர்.கே.நகர் மக்கள் மிகவும் விழிப்பு உணர்வு உள்ளவர்கள். அவர்களின் பிரச்னையைச் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்வேன். எதுவும் நடக்கவில்லை என்றால், தலைமைச் செயலகத்தை மக்களைக்கொண்டே முற்றுகையிடுவோம். முதலில் பொறுமையாகச் செயல்படுவேன். இல்லையென்றால் போராட்டம்தான்' என்றார் தீர்க்கமாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!