அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பரிசு: இது பொள்ளாச்சி புத்தாண்டு கொண்டாட்டம்!

மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில், புத்தாண்டையொட்டி பொள்ளாச்சி அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

புத்தகம்

புத்தாண்டு என்றால் கேக் வெட்டுவோம், நண்பர்கள், உறவினர்களுடன் நடுநிசியில் உலா வருவோம் அல்லது அதிகபட்சம் புதிய உறுதிமொழிகள் எடுப்போம். ஆனால், இவற்றில் எல்லாம் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகின்றனர் பொள்ளாச்சி கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர்.

தி.மு.க, பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்கள், ஆதித்தமிழர் பேரவை என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் ஒன்றிணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்த அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக, புத்தாண்டு தினத்தில் புத்தகங்களை வழங்கி வருகிறோம். முதலாம் ஆண்டு, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கு புத்தகங்களை வழங்கினோம். கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வருகிறோம்.

புத்தகம்

கடந்த ஆண்டு காற்று மாசுபாடு, நீர் உள்ளிட்டவை குறித்த விழிப்புஉணர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர் சிங் குறித்த புத்தகத்தை தயாரித்து, அதை 2,500 பிரதிகள் எடுத்து மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

பொள்ளாச்சி நகர மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெத்தநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சமத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளோம். அதேபோல, விவசாய தொழிற்சங்கங்களுக்கும் புத்தகங்கள் வழங்கியுள்ளோம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!