வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:08:21 (04/01/2018)

“வன உயிரினங்களைத் தத்தெடுங்கள்..!” வண்டலூர் உயிரியல் பூங்கா அழைப்பு

வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வன உயிரினங்களை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தத்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வன உயிரினங்களின் பாதுகாப்பு அவசியம் பற்றி அறிந்துகொள்ளவும் மற்றும் வன உயிரினங்களின் மேல் பற்று ஏற்படுவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகளைப் பாதுகாக்க பொதுமக்கள் பூங்கா நிர்வாகத்தில் நேரடியாக பங்கு கொள்ளலாம். விலங்கு இருப்பிடங்கள் பராமரிப்பு, உணவுகளைத் தயார் செய்தல், உணவுகளை விலங்குகளுக்கு வழங்குதல் போன்ற  பணிகளை, பொதுமக்களே செய்ய வழிவகை செய்து தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களால் முடிந்த குறைந்தபட்சத் தொகையை இந்தத்திட்டத்துக்கு வழங்கலாம். இத்தொகை முழுவதும் விலங்குகளின் உணவிற்காக செலவிடப்படும். அந்த தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு போன்ற சில குரங்கினங்களுக்கும், புறா, மயில், கிளி போன்ற சில பறவையினங்களுக்கும் உணவுச் செலவினை பாரத ஸ்டேட் வங்கி ஏற்று 1,99,733 ரூபாய் வழங்கி இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, மேற்கண்ட உயிரினங்களை ஒரு வருடத்துக்குத் தத்தெடுத்துள்ளது. விருப்பமுடையவர்கள் விலங்குகளை தத்தெடுத்து அவற்றிற்காகும் செலவை ஏற்கலாம் எனப் பூங்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க