வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (04/01/2018)

கடைசி தொடர்பு:13:22 (04/01/2018)

`எங்கள போலீஸ் அடிக்கிறாங்க' - கலெக்டரிடம் குமுறிய நாடோடி இன மக்கள்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில்  ஊசிமணி, பாசிமணி மாலைகள் வியாபாரம் செய்யும் நாடோடி இன மக்கள் போலீஸாரும், பெரும் வணிகர்களும் தாக்குவதோடு, பொருள்களையும் அள்ளிச் செல்வதால் உணவுக்கு வழியின்றித் தவிப்பதாகக் கூறி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், “நாங்கள் வெளி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளோம். ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் பாசிமணி மாலைகளை விற்றுவருகிறோம். அப்போது சில அதிகாரிகள் வந்து எங்கள் பொருள்களைத் தூக்கி எறிந்து, நாங்கள் வியாபாரம் செய்யமுயாதபடி இடையூறு செய்கிறார்கள்.  நாங்கள் பாசிமணி மாலைகளை விற்க உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க