ஜெ., சிகிச்சைபெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? - இன்று வழக்கு விசாரணை | Will Vetrivel get anticipatory bail in jayalalitha's video releasing case

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (04/01/2018)

கடைசி தொடர்பு:09:54 (04/01/2018)

ஜெ., சிகிச்சைபெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? - இன்று வழக்கு விசாரணை

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு முன்ஜாமீன் வழங்கும் வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. 

வெற்றிவேல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி, கடந்த மாதம் 20-ம் தேதி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இது, தமிழக அளவிலும் இந்திய அளவிலும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக, டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க இருந்த நிலையில், இந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெற்றிவேல் மீது வழக்குப் பதியுமாறு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்தார். அதேபோல, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பிலும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இந்த வழக்குகளில், முன்ஜாமீன் கேட்டு வெற்றிவேல் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.