`தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் ஷரத்துகள் மாற்றப்பட வேண்டும்!' - விஜயபாஸ்கர் திட்டவட்டம்

மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இது, இந்திய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

விஜயபாஸ்கர்

தேசிய மருத்துவ ஆணையப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், அதுகுறித்து விஜயபாஸ்கர், `மருத்துவ ஆணைய விவகாரத்தில் தமிழகத்துக்கு பாதிப்பு வராத வகையில் மத்திய அரசுக்கு  நெருக்கடி தரப்படும். குறிப்பாக, தமிழகப் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில், மசோதாவில் மாற்றம் கொண்டு வர  வலியுறுத்தப்படும். மசோதாவில், சில ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது' என்று கூறியவர், `தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படுவதுகுறித்து மத்திய அரசுதான் முடிவுசெய்ய வேண்டும்' என்றார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!