வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:16:00 (04/01/2018)

ஜல்லிக்கட்டுக்கு பந்தக்கால் நடும் விழா! கலகலப்பில் அவனியாபுரம்

அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள  ஜல்லிக்கட்டு விழாவுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சற்றுமுன் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானது. இதைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டதால், மக்களால் மகிழ்ச்சியாக நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க முடியவில்லை. இந்த ஆண்டு எந்தப் பிரச்னையும் இல்லாததால், பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 முக்கியமாக, மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், பாலமேட்டி 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான  ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. அதற்கான விதிகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்பற்றி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார், கலெக்டர் வீரராகவ ராவ். அதைத் தொடர்ந்து, இன்று காலை அவனியாபுரத்தில் ஊர்ப் பெரியவர்கள், ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, அவனியாபுரம் கோயிலருகே சிறப்பு பூஜைகள் செய்து  பந்தக்கால் நட்டனர். கடந்த வருடம் போல கடுமையான கெடுபிடிகள் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கான  வேலைகள்  தொடங்கியதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க