வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:18:30 (04/01/2018)

`தினமும் ஆயிரம் ரூபாய் மாமூல்!' - ஆளும் கட்சியினரின் அடாவடியில் பொங்கிய டாஸ்மாக் ஊழியர்கள்

தங்களை ஆளும்கட்சியினர் மிரட்டுவதாகவும் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து டாஸ்மாக் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். இந்தச் சம்பவம் காரைக்குடி பகுதியில் அரசியல் கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாகிகளிடம் பேசும், “சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனையையொட்டி டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடை சுமார் 15 வருடங்களாக அதே இடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு முன்பு டாஸ்மாக் கடை எங்கிருக்கிறதோ அதே இடத்தில் பார் செயல்படும். தற்போது நிலைமை அப்படியல்ல. பார் எங்கு அமைக்கிறார்களோ அந்த இடத்துக்கு டாஸ்மாக் கடையைக் கொண்டுபோகிறார்கள். இதனால் ஆளும்கட்சி நிர்வாகிகள் எடுத்திருக்கும் பார்களில் டாஸ்மாக் விற்பனையாளர்கள்  மாமூல் கட்ட வேண்டி கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் வருகிறார்கள். இந்தப் பிரச்னை கடந்த இரண்டு வருடமாக அதிகரித்துள்ளது.

ஆளும்கட்சியினர் நடத்தும் பார் உரிமையாளருக்கு தினந்தோறும் 1,000 ரூபாய் மாமூல் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார்கள். அதிகளவில் விற்பனையாகும் கடைகளுக்கு மாமூல் கூடுதலாகக் கட்ட வேண்டும் என்று அராஜகம் செய்கிறார்கள். கடையின் விற்பனை அதிகரிக்கும்போது பார் உரிமத் தொகை அதிகமாகும். இதற்காகக் கடையின் விற்பனையைக் குறைத்து காட்டச் சொல்கிறார்கள். பார் உரிமம் பெற்று மூன்றாம் நபரிடம் அந்தப் பார்களை ரவுடிகளிடம் கைமாற்றிவிடுகிறார்கள். இந்த நிலையில் தினந்தோறும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மேற்பார்வையாளர்கள் உயிர்பயத்தில் வேலை செய்ய வேண்டிய காட்டாயத்தில் இருக்கிறோம். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்போ விற்பனைக் குறைவோ பணியாளர்களுக்கு அச்சுறுத்தலோ மிரட்டலோ ஏற்படாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க