மீனவர்கள் விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை கடல் எல்லையையொட்டிப பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில் இன்று காலையில் மீன் பிடிக்கச் சென்ற 13 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், 'இன்று காலை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் உள்பட இலங்கைச் சிறைகளிலுள்ள 84 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 159 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாரம்பர்ய கடற்பகுதியில் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். எனவே, இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை தாமதமின்றி விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை இலங்கை அரசுடன் பேசி மேற்கொள்ளும்படி, வெளியுறவுத்துறைக்குத் தாங்கள் அறிவுறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!