வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (04/01/2018)

கடைசி தொடர்பு:20:15 (04/01/2018)

பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் பரிசு! அசத்தப்போகும் இஸ்ரேல் பிரதமர்

ஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு வரும் 14-ம் தேதி இந்தியா வருகிறார். பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் பரிசாக ஜீப் ஒன்றை கொண்டு வருகிறார். சாதாரண ஜீப் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு நிமிடத்தில் பல லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட ஜீப் இது. விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். 

கடல்நீரை குடிநீராக்கும் ஜீப்

கடந்த ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி, இஸ்ரேல் சென்றபோது, கால் மொபைல் என்ற இந்த ஜீப்பில் கடல்நீர் குடிநீராக்கும் விதம் குறித்து பிரதமர் மோடிக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.  ஜீப்பின் செயல்பாட்டைப் பார்த்து வியந்த மோடி, ''இந்தியா போன்ற நாட்டில் இது போன்ற ஜீப்புகள் இருந்தால் இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் உதவிகரமாக இருக்கும்'' என்று விருப்பம் தெரிவித்திருந்தார். 

இதையடுத்தே, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னுடன் இந்த ஜீப்பைக் கொண்டு வருகிறார். இந்த ஜீப் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரை 80 ஆயிரம் லிட்டர் சாதாரண நீரை உலக சுகாதார நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டின்படி, குடிநீராக்கிவிடும் திறன்மிக்கது. 

இஸ்ரேல் நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவு. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வழியாக அந்நாடு குடிநீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க