வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (05/01/2018)

கடைசி தொடர்பு:00:01 (05/01/2018)

சீல் இருந்தால்தான் இலவச வேட்டி- சேலை! அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் மக்கள்

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி -சேலை ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.28 லட்சம் பேருக்கு வழங்கபட உள்ளது. கடந்த ஆண்டு வரை கிராம நிர்வாக அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 188 வருவாய் கிராம அலுவலங்களில் இலவச வேட்டி சேலைகள் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டன. ஆனால் ஒகி புயல் நிவாரணப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளவர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த ஆண்டு ரேஷன்  கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இலவச வேட்டி சேலைகள் அனுப்பப்பட்டன. ஆனால் ஒவ்வொரு கடைக்கும் 50 சதவீத ஒதுக்கீடுதான் அனுப்பப்பட்டு உள்ளதால் அனைவருக்கும் வேட்டி -சேலை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இலவச வேட்டி -சேலை விநியோகம் செய்ய வேண்டும் என்கிற தகவலும் ரேஷன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையாம்.

அதிகாரிகள் 2017ம் ஆண்டு வாங்கியவர்களுக்கு இந்த ஆண்டும் இலவசப் பொருள்களை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனால் அதற்கு முந்திய ஆண்டுகளில் வாங்காமல் இருந்ததால் அவர்களுக்கும் இந்த ஆண்டு கிடையாதாம். ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டு இலவச வேட்டி வாங்கிய சீல் இருக்கிறதா? என்று பார்த்துதான் தற்போது வேட்டி- சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்தத் தகவலும் தெரியாமல் பெண்களும் ஆண்களும் ரேஷன் கடைகளில் காத்திருக்கின்றனர். இலவசபொருள்கள் வாங்க  தகுதியானவர்களுக்கு இலவச வேட்டி சேலை  வழங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவருக்கும் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க