வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/01/2018)

கடைசி தொடர்பு:23:30 (04/01/2018)

தனி மையங்கள் அமைத்து உறுப்பினர்கள் சேர்க்கை! கலக்கும் ரஜினி ரசிகர்கள்

சேலம் ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் சார்பாக சேலம் மாவட்டத்தில்  3 இடங்களில் மையங்கள் அமைத்து இலவசமாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள வணிக வளாகத்தில் சேலம் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் தலைவர் பழனிவேல் திறந்து வைத்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

இதுபற்றி சேலம் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் தலைவர் பழனிவேலிடம் பேசியபோது, ''சேலம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணிமன்றத்தின் மூலமாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகம், சேலம் பொன்னம்மாப்பேட்டை, சேலம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள புத்திரகவுண்டன் பாளையம் என 3 இடங்களில் சிறப்பு மையங்கள் தொடங்கி தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சேலம் வணிக வளாகத்தில் உள்ள மையத்தில் 3 கம்ப்யூட்டர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக ரசிகர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் என அதிக எண்ணிக்கையில் வருவதால் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வது சற்று கால தாமதம் ஏற்படுகிறது. அதனால் ஒவ்வொருவரிடமும் விண்ணப்பங்களைக் கொடுத்து அதை அவர்களாகவே பூர்த்தி செய்யச் சொல்லி. மீண்டும் நாங்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்கிறோம்.

இளைஞர்களும், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக வந்து தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து வருவது எங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் இது போல சிறப்பு மையங்கள் தொடங்கி உறுப்பினர் சேர்க்கை செய்யவிருக்கிறோம்'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க