கமல்ஹாசனைச் சாடிய தினகரன்..!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என்று நடிகர் கமல்ஹாசன் நினைக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆனந்தவிகடனில் கமல்ஹாசன் எழுதும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், 'அரசியலில் எடுபடமாட்டோம் என்ற அச்சத்தில் கமல்ஹாசன் இந்த மாதிரி பேசுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, கமல் பிச்சைக்காரர்களாகக் கருதுகிறாரா? கமல் நல்ல நடிகர். நல்ல சிந்தைனையாளர் என்று நினைத்தேன்.

ஆனால், வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என்று கமல் நினைக்கிறார்' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!