முட்டை சேர்க்காத கேக்... சர்க்கரை சேர்க்காத ஐஸ் கிரீம்... ஆவின் சாதனை  

சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் சர்க்கரை சேர்க்காத ஐஸ் கிரீம்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ஆவின் நிறுவனம். கடந்த காலத்தில் சோர்ந்து கிடந்த  தமிழக அரசின் நிறுவனமான ஆவின், தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையிலும், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் பயனடையும் வகையில் பலவகையான பால் பொருட்களை கலப்படமில்லாமல் தயாரித்து நியாயமான விலையில் சந்தைப்படுத்தி வருகிறது.

முட்டை

கடந்த மாதம் சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி சாதனை படைத்துள்ள ஆவின், அடுத்து இன்னும் பல நாடுகளில் கால் பதிக்க திட்டமிட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள ஆவின் ஆலைகளில் பல்வேறு பால்பொருட்களை மதிப்புக் கூட்டி தயாரித்து வருகிறது. நெய், வெண்ணை, சீஸ், தயிர், பால்பவுடர், மைசூர்பாகு, பால்கோவா, ஐஸ் க்ரீம், என பல பொருட்களை தயாரித்து வந்த ஆவின், புத்தாண்டை முன்னிட்டு முட்டை சேர்க்காத கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்தது. அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக சர்க்கரை சேர்க்காத ஐஸ் க்ரீமை சந்தை படுத்த உள்ளது. எந்த விஷயத்திலும் மனதில் பட்டத்தை  அதிரடியாக பேசக்கூடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நிர்வாகத்தில்  வரும் ஆவின் நிறுவனமும் அதிரடியாக சாதித்து வருகிறது என்கிறார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!