கரூரில் அரசுப் பேருந்து டிரைவர்மீது தாக்குதல்!

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தியப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஆங்காங்கே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியான கரூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், 40 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை. இதையொட்டி, போக்குவரத்து ஊழியர்கள் சிலர் பேருந்தில் ஏறிய பயணிகள் சிலரை இறக்கி விட்டு, பேருந்துகளைப் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். அப்பாேது, கரூர் போக்குவரத்துகழக பணிமனை எண் 2-க்கு அரசுப் பேருந்தை எடுத்துச் செல்ல முயன்ற பாலகிருஷ்ணன் என்ற அரசுப் பேருந்து டிரைவரை, அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகிகள் தாக்கியுள்ளதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

இதுகுறித்து விசாரித்தாேம். "அ.தி.மு.க தாெழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராம், சத்தியநாதன் ஆகியோர் உதவி மேலாளர் ஏ.எம்.சேகர் என்பவர் தூண்டுதலின் பேரில் அந்த டிரைவரை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட ஒட்டுநர் பாலகிருஷ்ணன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகிகள் தவிர மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவினை முற்றுகையிட்டு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரின் தொகுதியில், அதுவும், அதே துறையைச் சார்ந்த ஊழியரை தாக்கிய சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சங்க நிர்வாகிகள் தாக்குதலுக்குண்டான அரசுப்பேருந்து ஒட்டுநர் பாலகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!