42 ஆடுகளை காவு வாங்கிய மணல் லாரி: இது கோவை சோகம்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே  எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரி மோதி,  42  ஆடுகள் உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆடுகள் பலி

கோவை மாவட்டம், பாப்பம்பட்டியில் இருந்து காளப்பட்டி நோக்கி எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரி,  சூலூர் அருகே பீடம்பள்ளி பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது சாலையை கடந்து சென்ற ஆடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கலங்கல் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன், நஞ்சப்பன், ரவி ,பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான 42 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 23 ஆடுகள் காயமடைந்தன.

சம்பவம் இடத்திற்கு சென்ற சூலூர் காவல்துறையினர், வழக்கு லாரி ஓட்டுநர் நாகநாதன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதிகப்படியான சரக்கு ஏற்றி வந்ததன் காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!