2017-ல் விவேகானந்தர் மண்டபத்துக்கு 21.3 லட்சம் பேர் வருகை!

 உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்துசெல்கின்றனர். குமரியில், கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. இந்த இரண்டையும் பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் குகன், விவேகானந்தா,பொதிகை ஆகிய மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தப் படகு சர்வீஸ், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் மண்டபத்தையும் காண, டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, படகின் மூலம் சென்றுவருவார்கள்.

கடந்த ஆண்டு, விவேகானந்தர் மண்டபத்தை 21.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட இது அதிகமாகும். கடந்த ஆண்டு, திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றதால், அங்கு குறைவான பயணிகளே பார்த்தனர். சுற்றுலாப் பயணிகள்மூலம் படகுத்துறைக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!