வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:09:00 (05/01/2018)

காணக் கண்கோடி வேண்டும்..! சபரிமலையில் 11-ம் தேதி 'பேட்டைத் துள்ளல்' நிகழ்ச்சி

தென் இந்தியாவில்  பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், `பேட்டைத் துள்ளல் நிகழ்ச்சி' வரும் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. சபரிமலையில், மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 30-ம் தேதி, ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்கு இன்னும் 10 நாள்களே இருக்கின்றன. அதனால், பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. நேற்று வரை சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மூலமாக கேரள அரசுக்கு 186 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு வருமானத்தைவிட 23 கோடி ரூபாய் அதிகமாகும். அரவணை பிரசாதம் விற்பனைமூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. இதுவரை 79 கோடி ரூபாய்க்கு அரவணை விற்றுள்ளது.

அதுபோல, உண்டியல் காணிக்கைமூலம் சுமார் ரூ.66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு,  புகழ்பெற்ற 'பேட்டைத் துள்ளல்' நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வரும் 11-ம் தேதி மதியம் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க