கமல்ஹாசன் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

kamal
 

கமல்ஹாசன், மத்திய அரசையும் மாநில அரசையும் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். ஆனந்த விகடன் இதழில், 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடர் எழுதிவரும் கமல், இந்த வாரம் ஆர்.கே.நகர் தேர்தல்குறித்தும் அதன் வெற்றிகுறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். ஆளும் தரப்பும், சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் தரப்பும் அதிக அளவில் பணம் கொடுத்திருப்பதாகக் கமல் சுட்டிக்காட்டியிருந்தார். கமலின் கருத்துக்கு தினகரன் எதிர்வினையாற்றினார். இந்தச் சூழலில், சென்னையில் உள்ள கமலின் வீட்டை இந்து பாதுகாப்புக் கட்சியினர் முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள கமலின் வீட்டுக்கு, இன்று காலை முதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!