’முதல்வரே தயவாய்ப் பேசுங்கள்..!’ - கமல் வேண்டுகோள்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில்கொண்டு, தயவாய்ப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக தமிழக அரசுடன் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. அதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். இந்த விவகாரம்குறித்து  நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில், 'தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய்ப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவே, பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பிலா பரிசாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளும்கட்சியை விமர்சித்து, தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுவந்த கமல்ஹாசன், சுமார் ஒரு மாத காலமாக எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு, தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்குறித்து கமல் பதிவிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!