போராட்டம் மேலும் தீவிரமடையும்..! தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இல்லாததால், போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்குழு அறிவித்துள்ளது. 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறையில் அரசுடன் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், இன்று காலையில் தொழிற்சங்கக் கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் செளந்தரராஜன், 'பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு புதிய ஒப்பந்தம் போடவேண்டும். தனியாரைக் கொண்டு பேருந்துகள் இயக்குவது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தானது. ஒப்பந்தம் சட்டப்படியானது அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு வருந்துகிறோம். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இல்லாததால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். அறவழியில் போராட்டத்தை முன்னெடுப்போம்.

தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கினால், அதைத்தடுப்பதற்கான முயற்சிகளைக் மேற்கொள்வோம்' என்று தெரிவித்தார். இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!