வேட்டையாட வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு நேர்ந்த சோகம்!

 

பாம்பு

குளிர்காலங்களில், காலநிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மலைப்பாம்புகள் மலைகளை விட்டு கிராமத்துக்குள் புகுந்து ஆடு,கோழி உள்ளிட்ட உயிரினங்களைச் சாப்பிடுவது வழக்கம். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேலூர், கொட்டாம்பட்டி, சிவரக்கோட்டை, சோழவந்தான், அழகர்கோயில் உள்ளிட்ட பல பகுதிகளில் மலைப் பாம்புகள் அதிக அளவு வெளியேறி விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில், மேலூர்-மதுரை நான்குவழிச்சாலை நரசிங்கம்பட்டியில், சுமார் 10 அடி நீளமுள்ள தடியான மலைப்பாம்பு ஒன்று வாகனத்தில் அடிபட்டு நடுரோட்டில் கிடந்தது. சாலையில் சென்ற நபர்கள் சிலர், அதை சாலையின் ஓரமாகத் தள்ளிவிட்டனர்.  அடிபட்ட பாம்பை பலரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

பாம்புகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், ''பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள்  அதிகக் குளிர் மற்றும் உணவு இன்மை காரணமாக ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. அவற்றை, நாம் அடித்துக் கொன்றுவிடக் கூடாது. வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, உயிரினங்களைப் பாதுகாத்து, காடு, மலைகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்குத் தேவையான சில முன் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!