Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை' - ஆதரவாளர்களிடம் சீறிய பன்னீர்செல்வம்

ஜனவரி 14-ம் தேதி, பொங்கல் தினத்தன்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள். எப்போதும் மிக எளிமையாக கோயில்கள், சொந்தபந்தங்கள், தனது ஆசிரியர் வீடு, மனைவியின் வீடு என சிம்பிளாக பிறந்தநாளைக் கொண்டாடுவார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடவில்லை. இந்நிலையில், இந்த வருடம் வெகு விமரிசையாக பன்னீர் செல்வத்தின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய அவரது ஆதரவாளர்கள், தேனி நகரில் பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்தனர். அதைக் கண்ட மாவட்டத்தின் மற்ற இடங்களில் இருக்கும் கட்சிக்காரர்களும் வாழ்த்து பேனர் வைக்கத் தயாரானார்கள்.

நேற்றிரவு இதை அறிந்த பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கடுகடுத்தாராம். ‘’நான் எப்போது பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடியிருக்கிறேன். இதெல்லாம் எனக்குக் பிடிக்கவில்லை. உடனே அனைத்து பேனர்களையும் எடுத்துவிடுங்கள். நான் அடுத்த முறை ஊருக்கு வரும்போது, தேனியில் ஒரு பேனர்கூட இருக்கக் கூடாது!” என்று சொன்னது மட்டுமல்லாமல், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை போனில் தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க கட்சிக்காரர்களுக்கு அனுமதிகொடுக்கக் கூடாது என்றும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். இதனால், கட்சிக்காரர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். பிறந்தநாளைக் கொண்டாட பல லட்சங்கள் செலவுசெய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பன்னீர் போன்றவரும் இருக்கத்தான்செய்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement