பரமக்குடியில் சுப்ரமணியன் சுவாமி கொடும்பாவி எரிப்பு! புதிய தமிழகம் கட்சியினர் கைது

 மதுரை விமான நிலையத்துக்குப் பெயர் சூட்டும் விவகாரம் தொடர்பாகப் பேசிய சுப்ரமணியன் சுவாமி கொடும்பாவியை எரித்த பரமக்குடி புதிய தமிழகம் கட்சியினரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

பரமக்குடியில் சுப்பிரமணியன்சுவாமி கொடும்பாவி எரிப்பு

மாநிலங்களவையில் பேசிய பி.ஜே.பி எம்.பி சுப்ரமணியன் சுவாமி, ‘மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நேதாஜிக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதற்காக அவரின் பெயரைச் சூட்ட மறுக்கிறார்கள்’ என்றார். இதற்குப் பதில் அளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, `விமான நிலையங்களுக்குப் பெயர் மாற்றம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகே பெயர் மாற்றம் செய்யப்படும். ஆனால், பொதுக் கட்டடங்களுக்கோ இடங்களுக்கோ பிரபலமானவர்களின் பெயர்களைச் சூட்ட தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்துக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சுப்ரமணியன் சுவாமியைக் கண்டித்து பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியினர், அவரது கொடும்பாவியைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து, கொடும்பாவி கொளுத்திப் போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!