‘அமித்ஷாவின் மகன் ஊழலைப் பேசுவாரா கவர்னர்?’ கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகள்

கவர்னர்

சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-ம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி ஜனவரி 4-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், " 'உழைப்பில்லாத பலன், மனசாட்சி இல்லாத இன்பம், நற்குணம் இல்லாத அறிவு, நீதி இரா. முத்தரசன் ,சி.பி.ஐநேர்மையற்ற வணிகம், மனிதப்பண்பு இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத மதம், கோட்பாடு இல்லாத அரசியல் ஆகிய ஏழு கொடிய குற்றங்கள் தேசத்தையே அழித்துவிடும்' என்றார் மகாத்மா காந்தி. அவர் குறிப்பிட்டதுபோல அரசியலுக்கு அடிப்படைக் கோட்பாடு அவசியம். ஆனால், அண்மைக்காலமாக அதுபோன்றில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகாளாகவே இருக்கின்றனர். இந்தநிலை மாற்றப்பட வேண்டும்" என்றுஜி.ராமகிருஷ்ணன் - சி. பி .எம் பேசினார். 

அரசியல்வாதிகள் குறித்த ஆளுநரின் இந்தப்பேச்சு, தமிழக அரசியல்களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. 'அவரின் இந்தக்கருத்து தொடர்பாக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?' என்பது பற்றி அறிந்துகொள்வதற்காக சில தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், "ஊழல் அரசியல்வாதிகள் பெருகி விட்டார்கள் என்று பொதுவான கருத்தையே ஆளுநர் வெளியிட்டிருக்கிறார். நல்ல அரசியல் களத்தைக்காண அனைவருக்கும் விருப்பமே. அந்த அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால், இதே கருத்தை ஏற்கெனவே ஆளுநர் சார்ந்திருந்த பி.ஜே.பி. கட்சியின் பிரமுகர்களுக்கு ஆலோசனைகளாக எடுத்துரைப்பாரா? என்பதுதான் அவருக்கான கேள்வி" என்றார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மாகாத்மா காந்தி சொன்ன உழைப்பு இல்லாத பலன், மனசாட்சி இல்லாத இன்பம் உள்ளிட்ட ஏழு கொடிய குற்றங்களைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வகுப்புவாதத்தையும், ஊழலையும் காந்தி எதிர்த்ததைக் குறிப்பிடவில்லை. அதில் ஊழலை மட்டும் சொல்லிவிட்டு மகாத்மாவின் வகுப்புவாத எதிர்ப்பு பற்றி அவர் பேசாமல் விட்டுள்ளார். சரி...இது ஒருபுறம் இருக்கட்டும்...பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் எனப் பேசியிருப்பது உண்மைதான். அதேநேரத்தில், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஊழலைப்பற்றியும் ஆளுநர் பேசியிருந்தால் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர் நாட்டைப்பற்றி திருநாவுகரசர்- காங்கிரஸ் உண்மையிலேயே சிந்திக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஆளுநர் பொதுவான கருத்தாக மட்டுமே ஊழல் அரசியல்வாதிகள் அதிகரித்துவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். எனவே, அவரின் இந்தப்பேச்சு பாரபட்சமானதாகவே அமைந்துள்ளது" என்றார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர், "ஆளுநர் புதிதாக எதுவும் பேசவில்லை. அவர் அவ்வாறு ஊழல் மலிந்துவிட்டது என்று பேசியிருப்பது உண்மைதான். அதற்கு தேர்தல் நடைமுறைதான் முழுமுதல் காரணமாக உள்ளது. சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என தமிழிசை சவுந்தரராஜன்  -பிஜேபி எதுவானாலும் அந்தத் தேர்தலுக்கான செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்தாலோசித்து தேர்தல் விதிமுறைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்தால் மட்டுமே, ஊழலை ஒழிக்கமுடியும். எனவே, ஆளுநரின் இந்தக் கருத்தை அப்படியே புறந்தள்ளிவிட முடியாது. ஆளுநரின் கருத்து பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்தான் சிந்திக்க வேண்டும்" என்றார்.

ஆளுநர் கருத்துப் பற்றி பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "அரசியலில் ஊழல் இல்லை என்று சொல்லமுடியாது. ஆளுநரின் கருத்தை தவறு என்றும் சொல்லிவிட முடியாது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த காலங்களில் ஒளிவு மறைவாக இருந்துவந்த லஞ்ச, ஊழல்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பட்டவர்த்தனமாக அம்பலமானது. ஊழலைப்பற்றி ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கும் இந்தத் தருணத்தில் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். மத்தியில் பி.ஜே.பி தலைமையிலான அரசு, ஊழல் இல்லாத நிர்வாகத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறது. எனவே, ஆளுநரின் இந்தக்கருத்தை மற்ற அரசியல் கட்சிகளால் புறந்தள்ளிவிட முடியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!