ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளுக்குப் பயிற்சி முகாம்!

அ.தி.மு.க-வில் உள்ள அமைச்சர்களில் கட்சித் தலைமையின் மனதில் இடம்பிடிப்பதில், மற்றவர்களைவிட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதல் கவனம் செலுத்துவார். ஏற்கெனவே, மதுரையில் நூறடிக் கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றும் விழாவில், ஓ.பி.எஸ்ஸை புறக்கணித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் மரியாதை செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறார்.

ஜெயலலிதா

அந்தவகையில், தான் மாநிலத் தலைவராக உள்ள ஜெயலலிதா பேரவையின் மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இன்று சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொடங்கினார். ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். பேரவை நிர்வாகிகளுக்கு பேச்சு, எழுத்து, கட்சிப் பணி, பிரசாரம் உள்ளிட்டவற்றில் திறனை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்கள். இன்றும், நாளையும் இப்பயிற்சி நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!