மதுரையில் அரசுப் பேருந்து மீது தாக்குதல்!

 

 

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து மற்ற பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க இன்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒவ்வொரு பணிமனை முன்பும் பேருந்துகளை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பேரூந்து மீது தாக்குதல்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில். மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் குடியரசுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலாளர் புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!