சிவகங்கை நகராட்சியில் அடாவடி வரிவசூல்! மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை நகராட்சியின் அடாவடியான வரி வசூல் வேட்டையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

சிவகங்கை ஒன்றியக் குழு சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளரும், வழக்கறிஞருமான  மதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் கந்தசாமி தொடங்கிவைத்து பேசினார். போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன்,ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்துமற்றும் பலர் பேசினார்கள்.

சிவகங்கை நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டுவதைக் கண்டித்தும்,  பல மாதங்களுக்கு முன் தேதியிட்டு அடவாடியாக வீட்டுவரி வசூல் செய்வதை ரத்துச் செய்ய வலியுறுத்தியும்,  அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க கோரியும், நகராட்சி நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் சைக்கிள் நிறுத்தும் நிலைய உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!