ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் அதிகாலையில் நீராடிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அதிகாலை ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி, சிறப்பு பரிகார பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றம், வரும் 8-ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற முன்னவராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2 நாள்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்
 

இந்நிலையில், நேற்றிரவு ராமேஸ்வரத்துக்கு தனது குடும்பத்துடன் வருகைதந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், இங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார். இன்று அதிகாலை அக்னி தீர்த்தத்துக்குச் சென்று புனித நீராடினார். இதைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார். பின்னர், தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற உள்ள பரிகார பூஜையில் பங்கேற்றார்.  அடுத்து, தனுஷ்கோடி சென்று புனித நீராடி பூஜையை நிறைவுசெய்வார். மாலை 4 மணிக்கு தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்பாளைத் தரிசனம்செய்வார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!