மூன்றாவது நாளாகத் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்... மக்கள் கடும் அவதி!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் பெரும் அளவு இயங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். 

நிறுத்தத்தில் ஓடாமல் இருக்கும் பேருந்துகள்

`சென்னை நகரில் 35 சதவிகித பேருந்துகள் ஓடுகின்றன; அனைத்துப் பேருந்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள 865 அரசுப் பேருந்துகளில் காலை நிலவரப்படி 50 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 350 அரசுப்பேருந்துகளில் 44 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல,  அரியலூரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 194 அரசுப்பேருந்துகளில் 31 பேருந்துகளும் திருவாரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி இயக்கவேண்டிய 239 அரசுப்பேருந்துகளில் 50 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!