குளிரில் நடுங்கப்போகும் வட இந்தியா... எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

'இமாசலப்பிரதேசத்தில் பெய்துள்ள பனிப்பொழிவால், வட இந்தியாவில் வெப்பநிலை குறையும்' என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

பனிப் பொழிவு

 `தற்போது இமாசலத்தில், பொதுவாக இருப்பதைவிட  1 முதல் 2 டிகிரி வரை வெப்பநிலை குறைவாக இருக்கிறது. இது, வரும் நாள்களில் இன்னும் குறைய அதிக வாய்ப்புள்ளது. இமாசலப் பிரதேசத்தில் தற்போது பொழிந்துள்ள புதிய பனிப்பொழிவால், குளிர் அலை மிகவும் அடர்த்தியாகியுள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், வட இந்தியாவில் வெப்பநிலை குறையும் என்று தெரிகிறது. 

குளிர் அலைக்குப் பின்னர், வட இந்தியாவில் இருக்கும் பல ரயில் நிலையங்களில் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. இதனால், பல நூறு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடைசி இரண்டு நாள்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெப்பநிலை மேலும் குறைய உள்ளதால், வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!