வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (06/01/2018)

கடைசி தொடர்பு:17:36 (06/01/2018)

தமிழக அரசின் கெடுபிடியால் 58,616 டன் மணல் கர்நாடகாவுக்குச் செல்கிறது!

மலேசியாவிலிருந்து மீண்டும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இறக்குமதிசெய்யப்பட இருந்த 58,616 டன் மணல் கப்பல் மூலமாக மங்களூருக்குக் கொண்டுசெல்லப்பட்டது. 

Malesiya sand import in thoothukudi port

தமிழகத்தில், கட்டுமானப் பணிகளுக்கு கடுமையாக மணல் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில்,  புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை இறக்குமதிசெய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஜானகி டிரேடர்ஸ் ஏஜென்சியினர், மணலை லாரிகள்மூலம்  துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை சார்பில்  நடைச்சீட்டு அனுமதி மற்றும் தடையில்லாச் சான்றிதழ் பெறவில்லை எனக்கூறி, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, அந்நிறுவனம் உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் அளித்துள்ள மனுவில், 'இறக்குமதிசெய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 

Malesiya sand import in thoothukudi port

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், மலேசியாவிலிருந்து 'கிரேட்டன் ஈகிள்' என்ற கப்பல்மூலம் 58 ஆயிரத்து 616 டன் மணலை கடந்த 4-ம் தேதி, தூத்துக்குடி துறைமுகத்தின் 9-வது தளத்தில் இறக்குமதிசெய்து கிட்டங்கியில் தேக்கிவைக்க இருந்த நிலையில், 'இறக்குமதிசெய்யப்பட்ட மணலை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்; அந்த மணலுக்கு அரசே விலை நிர்ணயம்செய்யும். கையளவும் விற்பனை செய்ய மாநில அரசுக்கே முழு உரிமை உண்டு' என, அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்ட நிலையிலும், 58 ஆயிரத்து 616 டன் மலேசிய மணல் மங்களூருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க