ஏரியில் கலக்கும் அபாயகரமான கழிவு! நோயைப் பரப்பும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிமுக்கியமான மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை. கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல்  சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து சிகிச்சைபெறுகிறார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

மருத்துவர்கள், செவிலியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என சுமார் 1000 பேர் இங்கு பணியாற்றுகிறார்கள். மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மருத்துவமனையின் வளாகத்திலேயே தேங்கிநிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. மேலும், சிகிச்சைபெற வருபவர்களுக்கும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவமனையிலிருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அபாயகரமான கழிவு நீர், அருகில் உள்ள கொளவாய் ஏரியில் கலக்கிறது. இதனால், நிலத்தடிநீர் பெரிதும் மாசுபடுகிறது. ‘பொதுப்பணித்துறை மூலமாகக் கடந்த 2012-லிருந்து புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பலமுறை அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுவருகிறது. ஆனால், தமிழக அரசு இதைக் கண்டுகொள்வதாக இல்லை’ என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!