ரசிகர் மன்றத்தின் பெயர் மாற்றம்! - ரஜினியின் அடுத்த அரசியல் மூவ் 

ரஜினி ரசிகர் மன்றம் என்பது, 'ரஜினி மக்கள் மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

rajini
 

நடிகர் ரஜினிகாந்த் 2017 டிசம்பர் 31-ம் தேதி, ’அரசியலில் தீவிரமாக இறங்குவேன்’ என்று அறிவித்தார். பின்னர், ஜனவரி 4-ம் தேதி பாபா முத்திரைகொண்ட ரஜினி பேரவைக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார். இதனால், ரஜினியின் அரசியல் கட்சி சின்னமாக பாபா முத்திரை தேர்வுசெய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே, பாபா சின்னத்தைப் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாபா முத்திரையில் தாமரை மலர் இடம்பெற்றதால், ரஜினிகாந்த் பா.ஜ.க-வை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, பாபா முத்திரையில் இருந்த தாமரை நீக்கப்பட்டது. முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் பெயர், கொடி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரம்காட்டிவருகிறார் ரஜினி. www.rajinimandram.org என்ற தனி இணையதளம் தொடங்கி, ரசிகர்களும் பொது மக்களும் உறுப்பினராகச் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  தற்போது, ரஜினி ரசிகர் மன்றம் என்பது, ’ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!