வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (06/01/2018)

கடைசி தொடர்பு:14:30 (06/01/2018)

`மாடிமேல் இருந்து பார்க்கும் அவருக்கு எப்படித் தெரியும்!' - கமலைச் சீண்டும் ஜெயக்குமார்

தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை நடிகர் கமல்ஹாசன் விமர்சிப்பதும், அதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் எதிர்வினையாற்றுவதும் தொடர் கதையாகிவருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `கமலுக்கு மக்களின் கஷ்டம் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர் மக்களின் நிலையில் இருந்து பிரச்னைகளைப் பார்ப்பதில்லை' என்று கமலை விமர்சித்துள்ளார்.

ஜெயக்குமார்

இதுகுறித்து அவர் மேலும், `அ.தி.மு.க அரசுமீது கமல் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துவருகிறார். மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் தமிழக மக்களின் கஷ்டத்தை அறிய இயலாது. குடிசைகளில் இருந்து மக்களைச் சந்திப்பவர்கள் நாங்கள். எங்களுக்குத்தான் அவர்களின் கஷ்டம் தெரியும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.