வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (06/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (06/01/2018)

கலைநிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை, கிரிக்கெட்! மலேசியாவில் களைகட்டும் தென்னிந்திய நடிகர் சங்க விழா!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைவிழா இன்று மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்போடு புக்கிஜாலி அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சியின் முதல் தொகுப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டது. எம்.ஜி.ஆர் பற்றி நடிகர் பூச்சி முருகனும் சிவாஜி பற்றி இயக்குநர் ராஜேஷும் பேசினர். 

தென்னிந்திய நடிகர் சங்க கலைவிழா

இதுதவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம்போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜீவா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதன் முதல் மேட்சில் விஷாலின் மதுரை காளை அணியும், சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணியும் மோதியது. விஷால் அணியில் ரமணா, அஷோ செல்வன், ரிஷி, ஆர்.கே.சுரேஷ், அஜய், சாகி மற்றும் செந்தில் ஆகியோர் உள்ளனர். விஷால் அணியுடன் விளையாடிய சிவகார்த்திகேயன் அணி வெற்றிபெற்றது. இவரின் அணியில் சூரி, சதிஷ், அருண்ராஜா, விக்ரம்பிரபு, சாந்தனு, ப்ரேம் மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

அடுத்ததாக விஜய் சேதுபதி தலைமையிலான ராமநாதபுரம் ரைனோஸ் அணியும், சென்னை சிங்கம் சூர்யா அணியும் மோதவிருக்கிறது. விஜய் சேதுபதி அணியில் ஜீவி பிரகாஷ், சாம், ஆதவ் கண்ணதாசன், பரத், போஸ் வெங்கட், வருண், நாகேந்திர பிரசாத், அஸ்வின் மற்றும் கெளதம் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், சூர்யா அணியில் அருண் குமார், விக்ராந்த், மிர்ச்சி சிவா, உதய், ஹரீஷ், அருண் பாலாஜி,  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிகழ்ச்சியை வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சங்கீதா, ரோகிணி, சுஹாசினி, சுரேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கிவருகின்றனர்.