``தனிநபர் யாரையும் ரசிகர் என சித்திரிக்க வேண்டாம்!'’ - ஊடகங்களுக்கு ரஜினி வேண்டுகோள்

``தனிநபர் யாரையும் `ரஜினி ரசிகர்’ என்றோ `ரஜினி ஆதரவாளர்’ என்றோ சித்திரிக்க வேண்டாம்” என்று ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ரஜினி


ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாள்களாக ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல்தான் ஊடகங்களின் ஹாட் டாபிக். இந்நிலையில், ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தொலைக்காட்சி விவாதங்கள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், `அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மன்றம் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்றும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதையும் பொதுமக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `ரஜினி கூறியதுபோல் மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல், கட்சி அறிவிப்பு வரும்வரை  நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும்’ என்று மன்ற உறுப்பினர்களுக்கு சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!