வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (06/01/2018)

கடைசி தொடர்பு:17:46 (06/01/2018)

அரசுப் பேருந்தை இயக்க வந்த கோட்ட மேலாளருக்கு நடந்த பரிதாபம்!

போக்குவரத்து

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து மற்ற பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒவ்வொரு பணிமனை முன்பும் பேருந்துகளை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் உள்ள பேருந்துகளை இயக்கும் ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து மதுரைக் கோட்ட மேலாளர் லெட்சுமணனைப் போக்குவரத்து ஊழியர்கள் தாக்கினர். இதில் லெட்சுமணனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக லெட்சுமணன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடத்துநர் வெங்கடேஷ் , ஓட்டுநர் பாலன் மற்றும் ஜோசப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் .