வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (06/01/2018)

கடைசி தொடர்பு:18:10 (06/01/2018)

'உங்கள் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை இருக்காது'- விழாவில் அமைச்சரின் புத்தாண்டு செய்தி

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட டி.புதூர் நியாய விலைக்கடையில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லதா தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


 

அப்போது பேசிய அமைச்சர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு நலத் திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதில் பொங்கல் பரிசு தொகுப்பு ஒரு முத்தாய்ப்பான திட்டமாகும். நமது மாவட்டத்தில் அரிசு பெற தகுதி பெற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்கள, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள், காவல்துறை, வனத்துறை மற்றும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு குடும்ப அட்டைதாரர்கள் ஆக மொத்தம்  3 லட்சத்து 67ஆயிரத்து 776 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று  முதல் வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி 1 கிலோ, சீனி 1 கிலோ, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் இரண்டு அடி நீளம் கரும்புத்துண்டு ஆகியவை நியாயவிலைக் கடைகளின் மூலம் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பகுதி வாரியாக பிரித்து வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கண்டிப்பாக தண்ணீர் பிரச்னை இருக்காது என இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பர்ய விழாவான பொங்கல் திருநாளில் எந்தக் குறைகளும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசினை பெற்று பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும்'' என்றதோடு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தும் சொன்னார். 
          

நீங்க எப்படி பீல் பண்றீங்க