வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (06/01/2018)

கடைசி தொடர்பு:17:47 (06/01/2018)

`ஒரு விவசாயி சாவுக்கு ஆளாகிவிட்டேன்' - வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்

மதுரை ஒத்தக்கடை சாலையில் சில மாதங்களாக அதிக அளவு விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் சிந்தாமணி பழனியப்பா நகரைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற 20 வயது இளைஞர் ஒத்தக்கடை சாலையில் காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விவசாயி சேகர் படுகாயமடைந்து இறந்தார். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தன் தந்தையிடம் பேசியுள்ள மாரிசெல்வம், 'ஒரு விவசாயி சாவுக்கு ஆளாகிவிட்டேன்' என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், மனம் உடைந்த மாரிசெல்வம் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பரபரப்பானது. இது தொடர்பாக அவனியாபுரம் காவல்துறை வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகிறது .