போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஆதரவு!

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இந்தப் போராட்டத்தில்100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டதோடு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்தார்கள்.

கோவிந்தன்இதுபற்றி பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் கோவிந்தன், ''தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு முதலில் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று ஜாக்டோ - ஜியோ தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. அ.தி.மு.க, தேர்தல் அறிக்கையில் ஆசிரியார்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்தார்கள். ஆனால், இதுவரை மாற்றி அமைக்கவில்லை. 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்புற நூலகர், பகுதிநேரம், தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ஊதிய மாற்றத்துக்கு உத்திரவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 மற்றும் மறுக்கப்பட்டுள்ள மத்திய அரசுக்கு இணையான படிகளை வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 வழங்கிட வேண்டும். வரும் பொங்கல் போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!