மாமல்லபுரம் நாட்டிய விழாவில் முதன்முறையாக காஷ்மீரி நடனம்!

மாமல்லபுரத்தில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை இந்திய நாட்டிய விழா நடைபெறும். தினசரி மாலை 5.30-க்குத் தொடங்கி இரவு 8.30 வரை நாட்டிய விழா நடக்கும். இதில் தமிழக நாட்டுப்புறக் கலைகளுடன், மற்ற மாநிலங்களின் நடனங்களும் இடம்பெறும். தற்போது நடைபெறும் நாட்டியவிழாவில் முதன் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ’காஷ்மீரி’ நடனம் நடைபெறுகிறது.

மாமல்லபுரம், இந்திய நாட்டிய விழா

சர்தார் வல்லபாய் படேலின் 140-வது பிறந்ததினத்தையொட்டி ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டம் கடந்த 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலமும் அனைத்து மாநிலங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி கலை, பண்பாடு, இலக்கியம், விவசாயம் போன்ற கலாசாரங்களைத் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் 2017-2018-ம் ஆண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்தில் நடக்கும் இந்திய நாட்டிய விழாவில், ஜம்மு காஷமீர் மாநிலத்தின் பாரம்பர்ய நடனமான டோக்ரி, காஷ்மீரி, லடாக்கி, தாம்பாலி, பாக் நாக்மா, பவுறாரி, கோஜ்ரி, அரன், கீத்ரு, சஜ்ஜா உள்ளிட்ட நடனக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மாமல்லபுரத்தைத் தொடர்ந்து ஜனவரி 9-ம்தேதி தஞ்சாவூரிலும், 10-ம் தேதியன்று மதுரையிலும் ஜம்மு காஷ்மீர் பாரம்பர்ய நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!