Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 கிராம் எடையுள்ள சிறவி முதல் 7 கிலோ எடையுள்ள கூழைக்கிடா வரை..! கோடியக்கரையில் குவியும் பறவைகள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தையடுத்த கோடியக்கரையில் பல நாடுகளிலிருந்து பலவண்ணப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவற்றைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.  கோடியக்கரையில் சுமார் 10,000 கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 256 வகையான பறவைகள் இங்கு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் போதிய மழையில்லாததாலும், பருவநிலை மாற்றம் காரணமாகவும், பறவைகளுக்குத் தேவையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாலும், பறவைகள் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த மாதங்களில் பெய்த மழையால் சரணாலயத்திலுள்ள நீர்நிலைகள் நிறைந்தன. அதனால், பறவைகளுக்குத் தேவையான உணவுப் பொருள் கிடைப்பதால், அதிகளவில் பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.  



5 கிராம் எடையுள்ள சிறவி வகைகள், ஏழு கிலோ எடையுள்ள கூழைக்கிடா பறவைகள், 10,000 அடி உயரத்தில் பறக்கும் ஆஸ்திரேலியா வரித்தலை வாத்துகள், இலங்கையிலிருந்து கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து ஆலா, சைபிரீயா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து பூநாரைகள், இமாச்சலப்பிரதேசத்திலிருந்து இந்தியன் பிட்டா உள்பட 27 வகையான நீர்நிலைப் பறவைகளும், 50-க்கும் மேற்பட்ட நிலவகைப் பறவைகளும் வந்துள்ளன. இந்தப் பறவைகள் இங்கு 6 மாதங்கள் தங்கியிருக்கும். காலை, மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வனத்துறை சார்பில் வசதிகள் செய்யப்பட்டள்ளன. மேலும், சரணாயலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அவர்கள் பறவைகளைக் கண்டுகளிக்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்க வேண்டும் என்றும், உணவு, தங்குமிடத்திற்கு ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement