பரமக்குடி எம்.எல்.ஏவுக்கு எதிராகக் கொதிக்கும் இந்து மக்கள் கட்சி!

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முத்தையா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமக்கள்கட்சியினர் திடீரென்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சி

இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், "மதுரை விமான நிலையத்திற்கு தேசியத் தலைவர் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டவேண்டுமென்று இந்துமக்கள்கட்சி உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பாக மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் தற்பொழுது எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த நிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முத்தையா  தேவரின் பெயர் சூட்டப்படுவதை தடுக்கின்ற வகையிலும் தமிழகத்தில் ஜாதி மோதலை  தூண்டிவிடும் நோக்கத்திலும் பேசிய முத்தையாவின்ஆடியோ பேச்சு தற்பொழுது  சமுக வலை தளங்களில்வைரலாக பரவி வருகிறது.

முத்தையாவின் விஷமப் பேச்சை கண்டிக்கிறோம். சமீப காலமாக தென்மாவட்டங்களில் சாதி பிரச்சனை இல்லாமல் மக்கள்  அமைதியாக  இருக்கின்ற வேளையில், அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டமன்ற உறுப்பினர் இது போன்று பேசுவது  அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.  தமிழக அரசு  முத்தையாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை  ரத்து செய்ய வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்களை தூண்டி கலவரத்தை உண்டாக்கும் விதமாக பேசிய முத்தையாவை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்டவேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!