வெளியிடப்பட்ட நேரம்: 05:54 (07/01/2018)

கடைசி தொடர்பு:05:54 (07/01/2018)

3 மணிநேரத்தில்  உருவான ரெடிமேட் பேருந்து நிறுத்தம்!

திருச்சியில்  3 மணிநேரத்தில்  ரெடிமேட் பேருந்து நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  

பேருந்து நிலையம்

 

திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள  பழைய கலெக்டர் வளாகத்தில்  பேருந்துகள் வந்து செல்வது வழக்கம். அந்தப் பகுதிகளில் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை தேவை என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாநகர  பேருந்துகள் கலெக்டர் வளாகத்துக்குள் வந்து திரும்பும் பகுதியில் கான்கிரீட் ரெடிமேட் பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, லாரியில் கொண்டு வரப்பட்ட பேருந்து நிலையத்துக்கான பாகங்களைக் கொண்டு சுமார் 3 மணி நேரத்தில், மடமடவென  அனைத்து வேலையும் முடித்து பயன்பாட்டுக்கு வந்தது. லாரியில் பாகங்கள் வந்திறங்கியதும், அடுத்த நொடி, கோவையைச் சேர்ந்த கட்டுமான ஊழியர்கள் அஸ்திவாரம் தோண்டி, கம்பி கட்டி, கான்கிரீட் கலவையிட்டு, டைல்ஸ் பதித்து பேருந்து நிறுத்தமாக மாற்றிவிட்டனர்.

இந்த ரெடிமேட் கான்கிரீட்  பேருந்து நிலையம், சாதாரண கட்டுமான கட்டடத்தை  விட 20 சதவீதம் கூடுதலாக உழைக்கும். செலவும் குறைவு. இதேபோல்  கழிப்பிடங்கள், கழிவுநீர் தொட்டி, குடிநீர் தொட்டி, சுரங்கப்பாதை என பலவும் உருவாக்க முடியும் என்றும், இந்தப் பேருந்து நிலையத்தை எப்போதும், எங்கும் மாற்றிக்கொள்ளலாம். அதோடு முதலீடு வீணாகாது. இந்த புதிய தொழில்நுட்பத்தால்  கனவு வீடுகளைக் கூட ரெடிமேட் முறையில் கட்டலாம் என்கிறார்கள் அந்த கட்டுமான தொழிலாளர்கள்.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கான்கிரீட் ரெடிமேட் பேருந்து நிறுத்தம் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க