’கேட்கும் சம்பளத்தை கொடுக்க மனம் இருக்கு, ஆனால் பணம் இல்லை!’ - அமைச்சர் வருத்தம் 

தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

sengottaiyan
 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை தர அரசுக்கு மனம் உள்ளது ஆனால் நிதிதான் இல்லை” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர்  ’ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும்’ என்றும் குறிப்பிட்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!