ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா!

ராமநாதபுரம் அருள்மிகு ஆதிரெத்தினேசுவரர் தி ருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழா மற்றும் மார்கழி மாத நாட்டியாஞ்சலி விழா  நடைபெற்றது. விழாவில் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழா


விழாவிற்கு ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் தலைமை வகித்து வளரும் இசைக்கலைஞர்கள் உட்பட பலருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பேசினார். ராமநாதபுரம் இசைப்பள்ளி ஆசிரியர்.எஸ்.சோலைராஜன், மிருதங்க ஆசிரியர்.மு.லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜலதரங்க வித்வான் எம்.தேவேந்திர சிவாச்சாரியார் விழாவினை துவக்கி வைத்தார். எஸ்.லெட்சுமி நரசிம்மன் தலைமையிலான நாதசுவர குழுவினரின் மங்களை இசையுடன் விழா துவங்கியது.இதனைத் தொடர்ந்து மதுரை வசந்தராகம் இன்னிசை குழுவினரின் இசை நிகழ்ச்சியும்,ஒளவை இசையகம் அமைப்பின் மிருதங்க ஆசிரியர். எம்.லெட்சுமணன் தலைமையில் மிருதங்க இசை நிகழ்ச்சியும் நடந்தன.

ஒளவை இசையகத்தின் நிறுவனர் கலைவாணி குழுவினரின் வீணை-வயலின் இசை நிகழ்ச்சியும்,வித்யா நுண்கலை வித்யாலயா மாணவ,மாணவியர்களின் குரலிசை நிகழ்ச்சியும்,இசை ஆசிரியர்.எஸ். சோலராஜனின் தலைமை யில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு தியாகேசர் நாட்டியாலம் நிறுவனர். தி.வேம்பு தியாகராஜசுந்தரம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும்,ராமநாதபுரம் ஸ்ரீராமகிருஷ்ணா நாட்டியாலயா குழுவினரின் இசையாசிரியர்.ச.கண்ணன் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தன.

நிறைவாக விழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் வளரும் இசைக்கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் குழ.விவேகானந்தன்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.ஷியாமளாநாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!