’கெத்துன்னு நெனச்சி பன்ணிட்டேன்!’ - மன்னிப்பு கேட்ட ’பேரிகார்ட்டு’ பீட்டர்

peter

“அந்த டிவைடரை புட்சிக்கினு தேச்சிக்கினே வரோம் ரோட்ல. நெருப்பு பறக்குது டிவைட்ரலருந்து” என்று வீரவசனங்கள் பேசி வீடியோ வெளியிட்ட சென்னை இளைஞர் பீட்டர் போலீஸில் சிக்கி கொண்டதுதான் நேற்றிரவிலிருந்து ஹாட் டாபிக். தற்போது, பீட்டர் தன் செயலை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

peter
 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது (டிசம்பர் 31ம் தேதி இரவு) சென்னை காமராஜர் கடற்கரை சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்களை போலீஸ் தடுத்துநிறுத்தி சோதனை நடத்தினர். பைக்கை அதிவேகமாக ஓட்டக்கூடாது என்று இளைஞர்களை காவல்துறை அதிகாரிகள் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்ட்டை வாகனம் ஓட்டி கொண்டே இழுத்து சென்றுள்ளார். போக்குவரத்து அதிகாரிகள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை துரத்தி சென்றனர். ஆனால் இளைஞர்கள்  அதிவேகமாக பைக்கில் பறந்துவிட்டனர்.

 


இதனையடுத்து காவல்துறை அந்த இளைஞர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே  முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞர் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் அமர்ந்திருப்பவர் ஆபத்தான முறையில் பேரிகார்டை சாலையில் உரசியபடி இழுத்துச் சென்ற அந்த காட்சி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் பேர்கார்ட்டை இழுத்து சென்ற இளைஞர் தானாக வந்து போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். அவரின் பெயர் பீட்டர். 

பாதுகாப்புக்காக சாலையில் போடப்பட்டிருந்த பேரிகார்ட்டை வாகனத்தில் இருந்தபடி இழுத்து சென்றதை வீரசாகசம் போன்று தற்பெருமை பேசி, ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார் பீட்டர். அந்த வீடியோவில் காவல்துறையை ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார். வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் சைபர் க்ரைம் அதிகாரிகள் உதவியுடன் பீட்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் சென்னை போலீஸ். 


சென்னை போலீஸ் அளித்த ட்ரீட்மெண்டில் பீட்டர் தலைக்கீழாக மாறிவிட்டார். ’கெத்து என்று நினைத்து செய்துவிட்டோம். இதனால் பொதுமக்களுக்கு இடையூராகிவிட்டது. நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார் பீட்டர். அவர் பேசும் வீடியோவை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!